வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்?


வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் இன்று இடம்பெற்றிருப்பதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் நம்பகரமாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணைக்குவின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான ஜீவன் தியாகராஜா என்பவரே நியமிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளபோதிலும் பதவி ஏற்பு எப்போது என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

ஏற்கனவே வடக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம். சாள்ஸிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

தொடர்ந்தும் தானே பதவியில் இருப்பதாகவும் இது தொடர்பிலான எந்தத் தகவலும் தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post