எரிபொருள் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக இந்திய ஒயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
92 ஒக்ரைன் பெற்றோல் ஒரு லீற்றர் 5 ரூபாயினாலும் டீசல் ஒரு லீற்றர் 5 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 162 ரூபாயாகவும் ஒரு லீற்றர் டீசலின் விலை 116 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும் போதியளவு கையிருப்பு பேணப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.