தாயையும் மகனையும் கட்டி வைத்து தாக்கிக் கொள்ளை! யாழில் அதிகாலை நடந்த கொடூரம்!!


யாழ்.மாவட்டத்தின் நாவற்குழி பிரதேசத்தில் இன்று (3) அதிகாலை திருடர்கள் வீடு புகுந்து தாயையும், மகனையும் கட்டி வைத்து தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும், மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நாவற்குழி மேற்கிலுள்ள வீடொன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த திருடர்கள், வீட்டிலிருந்த தாயையும், மகனையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். திருடர்களின் தாக்குதலில் 17 வயதான மகனின் கை உடைந்துள்ளது. 42 வயதான தாயின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த தாயும் மகனும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

குடும்பத் தலைவரை இழந்த அந்த குடும்பம் வறுமை நிலையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது
Previous Post Next Post