பிரான்ஸ் அதிபர் மக்ரோன் ஆடிய உதைபந்தாட்டப் போட்டி!


  • குமாரதாஸன். பாரிஸ்.
அதிபர் எமானுவல் மக்ரோன் கால்பந்து ப்போட்டி ஒன்றில் விளையாடும் காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. மூன்று இலக்கம் பொறித்த சீருடையுடன் மக்ரோன் பந்தாடும் அக் காட்சிகள் உதைபந்தாட்ட ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன.
 
பாரிஸ் மருத்துவமனைகள் மன்றத்துக்கு நிதி சேகரிப்பதற்காக நடத்தப்பட்ட கால் பந்தாட்டப் போட்டிகள் கடந்த வியாழன் Poissy (Yvelines) மருத்துவமனை மைதானத்தில் நடைபெற்றன.அதில் பிரான்ஸ் Varieties Club அணியில் அரசுத் தலைவர் மக்ரோனும் ஒரு வீரராக இணைந்து கொண்டு விளையாடினார்.

Poissy மருத்துவமனையின் தாதியர்களது அணி அதிபர் மக்ரோனின் அணியை எதிர்த்து விளையாடியது. முன்னாள் சர்வதேச உதைபந்தாட்ட மத்தியஸ்தர் Patrick Lhermitte நடுவராகக் கலந்து கொண்டார்.

பாரிஸ் - பிரான்ஸ் மருத்துவமனைகள் மன்றத்தின் (Hospitals of Paris-Hospitals of France foundation) தலைவர் பிரிஜித் மக்ரோனும் (Brigitte Macron) போட்டிகளில் பார்வையாளராகக் கலந்துகொண்டார்.

பிரான்ஸின் அதிபர்களின் வரிசையில் இளம் தலைவர் மக்ரோன் தனது பல்கலைக்கழக நாட்களில் கால்பந்து மற்றும் ரென்னிஸ் விளையாட்டுகளில்
ஈடுபட்டவராவார்.அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேர்தலை எதிர்கொள்கின்ற அவர்
சகல தளங்களிலும் தனக்கான ஆதரவைதிரட்டுவதில் ஈடுபட்டுவருகின்றார் என்று நோக்கர்கள் கூறுகின்றனர்.
Previous Post Next Post