நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாகியின் பூதவுடல் தீயுடன் சங்கமம்! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல் தீயுடன் சங்கமானது.

நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று, பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் நேற்று முற்பகல் இறைவனடி சேர்ந்தார்.

அவரது இறுதிக் கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றது.

பெருமளவான பொதுமக்கள் குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பூதவுடல் காலை 11 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் வழிநெடுகிலும் பொதுமக்கள், வீதிகளில் நின்றவர்கள் அஞ்சலி செலுத்தியதுடன் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.





Previous Post Next Post