இந்திய மீனவர்கள் விவகாரத்துக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் வரையில் எந்தவொரு அரசியல்வாதிகளும் பருத்தித்துறையின் முனை எல்லைக்குள் உள்நுழையவேண்டாம் என்று வலியுறுத்தி முனை கடற்றொழில் சமூகத்தினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் குறித்த நிபந்தனைகளை வலியுறுத்தி மீனவர்களால் பதாதைகள் கட்டப்பட்டு போராட்டம் இடம்பெற்றது.
“முனை கடற்றொழில் சமூகமாகிய நாம் எதிர்கொள்ளும் எல்லை தாண்டிய இந்தியன் இழுவைப் படகுகளையும் தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை எந்தவொரு அரசியல் கட்சிகளும் எமது முனை எல்லைக்குள் உட் பிரவேசிக்க வேண்டாம் என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம். மீறி வரும் பட்சத்தில் அடித்து விரட்டப்படுவீர்கள் என்பதையும் உறுதியாகக் கூறுகிறோம்” என்று எழுதப்பட்ட பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.