யாழ் கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை ஆரம்பமாக உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று அபாய நிலை காரணமாக நாடுபூராகவும் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது யாழ் கொழும்பு புகையிரத சேவையும் நிறுத்தப்பட்ட நிலையில் கல்கிசை காங்கேசன்துறைக்கிடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 3ஆம் திகதி மாலை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்தார்.
எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை ஐந்து முப்பது மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்படும் புகையிரதம் காங்கேசன்துறையை வந்தடைந்து மறுநாள் 4 ஆம் திகதி காலை ஐந்து முப்பது மணி அளவில் காங்கேசன் துறையிலிருந்து புறப்பட்டு கொழும்புக்கு பயணிக்கவுள்ளது.
எனினும் இன்று வரை முற்பதிவு தொடர்பான எந்தவித தகவல்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவே எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகும் புகையிரத சேவையானது வழமைபோல் இடம்பெறவுள்ளது.
யாழில் இருந்து கொழும்பிற்கு ஒரு சேவையும் கொழும்பில் இருந்து யாழிற்கு ஒரு சேவையுமாக சாதாரண புகையிரத சேவை மாத்திரமே முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.