ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற இலங்கைத் தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு!


பெலாரஷ்யன்-லிதுவேனியன் எல்லைக்கு அருகில் இலங்கையரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெலாரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவரின் சடலம் ஒக்டோபர் 5 அன்று லிதுவேனியன் எல்லையிலிருந்து பெலாரஸ் நோக்கி சுமார் 500 மீட்டர் தூரத்தில் புதரில் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் அவரது கைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

29 வயதுடைய இலங்கை குடிமகனான ராகவன் கிருஷாந்தன் என்பது தெரியவந்தது.

லிதுவேனியாவிற்குள்ளிருந்து பெலாரஸுக்கு கட்டாயமாக வெளியேற்றப்பட முயன்ற புலம்பெயர்ந்தோர் குழுவில் அவர் ஒருவர் என்று நம்புவதாக லிதுவேனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த இலங்கையரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

எல்லை கடந்த அகதிகளை வெளியேற்ற எல்லைக் காவலர்கள் மிகப்கொடூரமான தாக்குதல்களை நடத்துவதாக லிதுவேனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post