யாழில் கொடூரம்! 18 வயதான பெண் பிரசவித்த குழந்தையை தாயும் மகளும் இணைந்து உயிருடன் புதைக்க முயற்சி!!


யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை இளம் பெண் ஒருவரும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை நிலத்தில் புதைப்பதற்கு குறித்த பெண்ணும் அவருடைய தாயாரும் முனைந்திருக்கின்றனர்.

அதன் போது குழந்தை அழுததால் அயலவர்கள் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை உணர்ந்து குழந்தையை மீட்டுக் காப்பாற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட அதேவேளை, குழந்தை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
Previous Post Next Post