ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று பிரான்ஸிலிருந்து இன்று அதிகாலை இலங்கை வந்துள்ளது.
ஆறு ஆண்டு இடைவெளியின் பின்னர் இலங்கைக்கும், பிரான்ஸிற்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 200 பயணிகளுடன் இன்றைய தினம் குறித்த விமானம் வந்துள்ளது.
இன்று அதிகாலை 4.50 மணியளவில் UL-564 விமானம் மூலம் பிரான்ஸிலிருந்து பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
வாரத்திற்கு மூன்று நாட்கள் இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான சேவை முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான சேவை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.