யாழ். நகரில் முகக்கவசம் அணியாத 25 பேர் யாழ். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். நகரில் தற்பொழுது பண்டிகை காலம் என்பதினால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடியுள்ள நிலையில், இன்றைய தினம் யாழ். காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினர் திடீரென வீதிப் பரிசோதனை நடவடிக்கையினை முன்னெடுத்த போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 25 பேரும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறான நடவடிக்கை தொடர்ச்சியாக எதிர்வரும் நாட்களிலும் முன்னெடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை சரிவர கடைப்பிடிக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.