முல்லைத்தீவில் இளம் புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதில் முல்லைத்தீவு குமுழமுனைப் பகுதியைச் சேர்ந்த புகைப்படப்பிடிப்பாளரும் புகைப்படக் கலையக உரிமையாளருமான ஜெகதீஸ்வரன் கஜீவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
நேற்றைய தினம் படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விபத்தொன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய போதும் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.