சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் முன்னாள் தவிசாளர் இ.தேவசகாயம்பிள்ளை கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
தேவசகாயம் பிள்ளை, 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளாட்சிச் சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சாவகச்சேரி நகர சபைக்கு போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.
தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் சபையின் தலைவராக இருந்து பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதார் என்று குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.