யாழ்.நகரில் இன்று விற்பனை செய்யப்பட்ட வாழைக்குற்றிகள்! (படங்கள்)

யாழ்ப்பாண நகரப் பகுதியில் வாழைக்குற்றிகள் பரவலாக விற்பனை செய்யப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் அனைத்து இந்துக்களும் கார்த்திகை விளக்கீட்டுத் திருநாளை தீபங்கள் ஏற்றிக் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையிலேயே வாழை குற்றிகளில் கொப்பறை வைத்து தீபம் ஏற்றுவதும் சிறப்பான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.

ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில், இவ்வருடம் தீபம் ஏற்றுவதற்காக வாழைக்குற்றிகள் யாழ் நகரில் விற்பனை செய்யப்படுகிறன.

ஒரு வாழைக்குற்றி 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Previous Post Next Post