வடமராட்சியில் பனையால் தவறிவிழுந்த சீவல் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் இமையாணன் கிழக்கு உடுப்பிட்டியை சேர்ந்த ந.ஜெயராசா (வயது- 48) என்பவரே உயிரிழந்தவராவார்.
ஞாயிற்றுக்கிழமை(21) மாலை சீவல் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை(22) வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
உடற்கூற்று பரிசோதனையில் நுரையீரலில் வெடிப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.