காங்கேசன்துறை – கல்கிசை இடையிலான காலை நேர தொடருந்து சேவைக்கான ஆசன முற்பதிவுகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று யாழ்ப்பாணம் ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் அறிவித்துள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கும் யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலையத்திலிருந்து 6.10 மணிக்கும் சேவையை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை நாளை முதல் சேவையை மீள ஆரம்பிக்கவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கான ஆசன முற்பதிவுகள் இன்று புதன்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று யாழ்ப்பாணம் ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் கூறினார்.
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையே குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு ஆசனப் பதிவுக் கட்டணமாக ஆயிரத்து 400 ரூபாயும் இரண்டாம் வகுப்புக் கட்டணமாக 800 ரூபாயும் அறவிடப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முற்பதிவு இன்றி சாதாரண வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு 350 கட்டணம் அறிவிடப்படும் என்றும் யாழ்ப்பாணம் ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.