யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு!


யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி தெற்குப் பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அப் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் ராஜஜெனோசன் (வயது-21) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post