வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிவயோகன் காலமானார்!


வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர், எந்திரி வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானர்.

உடல் நிலைப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் அவர் இன்று முற்பகல் அவருடைய வீட்டில் காலமானார் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கரவெட்டி, துன்னாலை மத்தியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சிவயோகன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளருமாவார்.

இறுதி கிரிகைகள் நாளைய தினம் திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் துன்னாலை கோவிற்கடவையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post