யாழ்ப்பாணம் பருத்தித்துறை முதலாம் கட்டைப் பகுதியில் மரக்காலை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அப் பகுதியைச் சேர்ந்த சண்முகராசா துஷ்யந்தன் (வயது-21) எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த இளைஞனுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.