யாழ்.மண்டைதீவுக் கடலில் கடற்படையினரை கண்டதும் கடலில் பாய்ந்த மீனவர் சடலமாக மீட்பு! (படங்கள்)


யாழ்.மண்டைதீவு - பூவரசந்தீவு கடற்பகுதியில் கடற்படையினர் வருவதை கண்டதும் கடலில் பாய்ந்து தப்பிக்க முயற்சித்த மீனவர் பூநகரி - கௌதாரிமுனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

பூவரசந்தீவின் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக கடற்படையினர் பதுங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில் படகு ஒன்று கரையை நோக்கி வருவதை அவதானித்த கடற்படையினர் சோதனை செய்யத்  தயாரானபோது கடற்படையினரை கண்டவர் படகிலிருந்து கடலில் பாய்ந்துள்ளார்.

மீனவர் கடலில் குதித்த இடத்திலிருந்து 5 அல்லது 10 நிமிடங்கள் நீந்தினால் கரையை அடைந்துவிடலாம் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை பூநகரி - கௌதாரிமுனை கடற்கரையில் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

பாசையூரை சேர்ந்த மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

பூநகரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சடலத்தை மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Previous Post Next Post