யாழ்.சுன்னாகம் - அம்பனை பகுதியில் நேற்றைய தினம் குடும்பஸ்த்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
இச் சம்பவம் நேற்று மாலை 2 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த குடும்பஸ்தர் வெளியே செல்லும் போது அயல் வீட்டாரினால் வீதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
இரு இளைஞர்கள் அவரை நடு வீதியில் அடித்து வீழ்த்தி வீட்டுக்குள் இழுத்து சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 55 வயதுடைய முத்து ஜெகதீசன் என்பவரே தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அயல் வீட்டு இரு இளைஞர்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளனர்.