யாழில் இனந்தெரியாத நபர்களினால் இளம் பெண் கடத்தல்! சகோதரன் மீதும் தாக்குதல்!!

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் சகோதரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இளம்பெண் கடத்தப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. தெல்லிப்பழை வைத்தியசாலையில் பணிபுரியும் குறித்த இளம் பெண் தனது சகோதரனது மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சகோதரன் மீது தாக்குதல் நடத்திவிட்டு இளம்பெண்ணை கடத்திச் சென்றதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post