கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் படகிலிருந்து தவறி வீழ்ந்த இந்திய மீனவர் ஒருவரின் சடலம் காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து கடந்த 2ஆம் திகதி மூவர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து மீனவர் ஒருவர் கடலில்தவறி வீழ்ந்து மாயமானார்.
மாயமான மீனவரை கடந்த 4 நாள்களாக சக மீனவர்கள் தேடிவந்த நிலையில் இன்று மதியம் அவர் காரைநகர் கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினார்.
சடலம் உடற்கூறுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.