யாழ்ப்பாணத்தில் உயர்தர மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்.அரியாலைப் பகுதியைச் சேர்ந்த வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் பிரேமச்சந்திரன் திசாரா (வயது-17) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.