கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று புடவையகம் ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஏ-9 வீதியில் கிளிநொச்சி நகரத்தில் உள்ள புடவையகம் ஒன்றிற்குள் புகுந்துள்ளது.
குறித்த கடையில் பணியாளர்கள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்ற மக்கள் என பலர் இருந்த போதும் எவருக்கும் எந்த விதமான காயங்களுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.