கிளிநொச்சி - உதயநகர் பிரதேசத்தில் 5 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது உடலை முதலைகள் உள்ள ஏரியில் வீசியதற்கான தகவல் வெளியாகியுள்ளது.கொலை தொடர்பில் 22 வயதுடைய இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வீட்டில் இருந்த போது அவரை கொலை செய்து அவரது சடலத்தை பை ஒன்றில் கட்டியுள்ளார். பின்னர் அதனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று முதலைகள் அதிகமாக உள்ள ஏரியில் வீசியதாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எனினும் குறித்த பெண்ணின் சடலம் மிதந்துக் கொண்டிருந்த போது பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கிளிநொச்சி - உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய 5 பிள்ளைகளின் தாய் நேற்று முன்தினம் வங்கிக்கு சென்று திரும்பிய பின்னர் காணாமல் போயனதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண் லண்டனில் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சி பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளார்.
இந்த பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை திருடும் நோக்கிலேயே இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான கைது செய்யப்பட்ட இளைஞனிடம் உயிரிழந்த பெண்ணுக்கு சொந்தமான தங்க நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி: