முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வவுனிக்குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனிக்குளத்தில் இன்று (15) காலை வள்ளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை வள்ளம் கவிழ்ந்து நீரில் மூழ்கியதில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அம்பாள்புரம் வவுனிக்குளத்தினை சேர்ந்த விஜயரட்ணம் நிலவன் (24 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தற்போது, உடலம் மாங்குளம் ஆதாரமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.