யாழில் வீதியால் சென்றுக்கொண்டிருந்த சிறுவனை திருடர்கள் கத்தியால் குத்தி, அவரிடமிருந்து தொலைபேசியைபறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (25-12-2021) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, தாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மருதனார் பகுதியை சேர்ந்த 16 வயதான இளைஞன் ஒருவர் தொலைபேசியில் பேசியபடி, துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியால் குத்தி தொலைபேசியைப் பறித்துச் சென்றுள்ளனர்.
இதன் போது காயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.