நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த அரசு உத்தரவு!


நாடுமுழுவதும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அது தொடர்பில் முடிவு எடுக்கும் வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிவாயு நிறுவனங்களின் விநியோகம் மற்றும் சில்லறை விற்பனையை இடைநிறுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் செயற்பாடுகள் நேற்றிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், எரிவாயு விற்பனையை இடைநிறுத்துவதற்கான எந்தவொரு அறிவிப்பும் தமது நிறுவனத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வெகபிட்டிய தெரிவித்தார்.
Previous Post Next Post