பாகிஸ்தானில் இலங்கையரை அடித்துக் கொலை செய்து எரியூட்டிய கொடூரம்! (வீடியோ)


பாகிஸ்தானிலுள்ள தொழிற்சாலையொன்றில் மேலாளராக பணியாற்றி வந்த இலங்கையர், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் வீதியில் எரிக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தினார் என குற்றம்சாட்டப்பட்டு இந்தக் கொடூரம் நடந்தது.

பஞ்சாப் மாநிலத்தின், சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில், தனியார் தொழிற்சாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 

இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். 

தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான ஆண்களும் இளைஞர்களும் கூடியிருந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கொண்ட சுவரொட்டிகளை இழிவுபடுத்தியதாக தொழிற்சாலை தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என்று சியால்கோட் காவல்துறைத் தலைவர் அர்மகன் கோண்டல் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

மேலாளரை தொழிற்சாலைக்குள் கும்பல் அடித்து, சித்திரவதை செய்து கொன்றது. பின்னர் எரித்தது.

இந்த கொடூர சம்பவத்துடன் தொடர்புடைய 50 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post