மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி த.கருணாகரன் மீது தாக்குதல் நடத்திய கொள்ளையன் ஒருவன், அவரது துணைவியார் அணிந்திருந்த 11 தங்கப் பவுண் நகைகளை கொள்ளையிட்டு தப்பித்துள்ளான்.
அக்கரைப்பற்று பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு இடம்பெற்றது.
இல்லத்தின் யன்னல் வழியாக உள்நுழைந்த கொள்ளையன், நீதிபதியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது துணைவியார் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.