கனடாவில் விபத்து! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!!


கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் யாழ்ப்பாணம் புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட தமிழர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post