வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் புகையிரதத்தின் முன் பாய்ந்து குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற உத்தராதேவி புகையிரதமானது வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் பயணித்த போது புகையிரத தண்டவாளத்தில் ஒருவர் தலையை வைத்து படுத்திருந்த நிலையில் அவர் மீது புகையிரதம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்தில் வவுனியா தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த கந்தையா ரவி என்ற 55 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
அவரது உடமையில் இருந்து கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டதுடன், குடும்ப விவகாரமே இந்தத் தற்கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.