- குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸின் பழமைவாதிகளது பிரதான வலது அணிக் கட்சியான லே ரிப்பப்ளிக்கன் (Les Republicains-LR)சார்பில் அதிபர் தேர்தலில் போட்டி போடப்போகின்ற வேட்பாளராக வலெரி பெக்ரெஸ் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உட்கட்சி வாக்கெடுப்பில் கட்சியின் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைய மூலம் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். 54 வயதான பெக்ரெஸ் அம்மையார் பாரிஸ் நகரை உள்ளடக்கிய
இல்-து-பிரான்ஸ்(Paris Île-de-France region) பிராந்தியத் தலைவியாகப் பதவி வகிக்கிறார்.
நேற்றும் இன்றுமாக நடைபெற்ற கட்சி வாக்கெடுப்பின் இரண்டாவது சுற்றில் வலெரி பெக்ரெஸ் மற்றொரு வலது அணிப் பிரமுகரான எரிக் சியொட்டியை (Éric Ciotti) தோற்கடித்து வெற்றிபெற்றிருக்கிறார். அவருக்கு 69,326 வாக்குகளும் (60.95%), எரிக் சியொட்டிக்கு 44,412 வாக்குகளும்(39.05%) கிடைத்தன.
"ஜெனரல் ஹோலின் (General Charles- de- Gaulle) அரசியல் குடும்பத்தின் வழிவந்த
நமது கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் ஒரு பெண் வேட்பாளராக நின்று கொண்டு எங்கள் தேசத்தின் அனைத்துப் பெண்களையும் எண்ணிப் பார்க்கின்றேன். எனது வெற்றிக்கு என்னாலான அனைத்தையும் செய்வேன்.." - என்று முடிவு அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சி ஆரவாரத்தின் மத்தியில் பெக்ரெஸ் கூறினார்.
வலது சாரிகள் தரப்பிலிருந்து மக்ரோனுக்குச் சவாலாகத் தேர்தல் களத்துக்கு வருவார் என முன்னர் நம்பப்பட்டவரான சேவியர் பெர்ட்ராண்ட்(Xavier Bertrand) முதல் சுற்று வாக்கெடுப்பிலேயே தோல்வி கண்டார்.இரண்டாவது சுற்றில் பெக்ரஸுக்குத் தனது ஆதரவை அவர் வெளியிட்டிருந்தார்.
வலெரி பெக்ரெஸின் வெற்றியை எலிஸே மாளிகை உன்னிப்பாக அவதானிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதற்குக் காரணம் அவரது அரசியல் பெரும்பாலும் மக்ரோனின் மைய வலதுசார்புக் கொள்கைகளை ஒத்தவை. மக்ரோனின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வோர் ஒரு மாற்றத்துக்காக அவருக்குப் பதிலாக பெக்ரெஸுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
"லே ரிப்பப்ளிக்கன்" கட்சி முன்னாள் அதிபர் சார்கோஷிக்குப் பின்னர் தேசிய அரசியலில் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதிபர் வேட்பாளராகக் களமிறங்கத் தயாரான நிலையில் வேட்பாளர் பிரான்ஷூவா பியோன் ஊழல் விவகாரம் ஒன்றில் சிக்கியதால் 2017 அதிபர் தேர்தலில் நாட்டின் தலைமைப் பதவியைக் கைப்பற்றுகின்ற வாய்ப்பை அக் கட்சி தவறவிட்டது. அந்தத் தேர்தலில் மக்ரோன் அதிபரானார்.
இதுவரை வெளியாகிய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் இந்தத் தடவையும் அதிபர் மக்ரோனே இரண்டாவது முறையும் அதிபராக தெரிவாகுவார் என்பதைக்
காட்டியுள்ளன. வலெரி பெக்ரெஸ் பத்து சதவீத வாக்குகளையே பெறுவார் என்றுகணிப்புகள் கூறுகின்றன.
தீவிர வலதுசாரியான அவர் தேர்தலில் போட்டியிடும் முடிவை இந்த வாரம் முறைப்படி அறிவித்திருக்கிறார்.
"சாத்தியமில்லை என்பது பிரெஞ்சு அல்ல" (Impossible n'est pas français) என்பதைத் தனது தேர்தல் பிரசார மகுட வாக்கியமாக வெளியிட்டிருக்கின்ற அவர், தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை இன்று பாரிஸ் புற நகரமாகிய Villepinte இல் உள்ள கண்காட்சி மண்டபத்தில் நடத்துகின்றார்.
இதன் மூலம் பிரான்ஸின் பாரம்பரியம் மிக்க அக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராகத் தெரிவாகியிருக்கின்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெறுகிறார்.

இதேவேளை நாடறிந்த ஊடகவியலாளரும் தொலைக்காட்சி விவாதவியலாளருமாகிய எரிக் செமூர் இந்தத் தடவை தேர்தலில் புகுந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.