பாகிஸ்தான் - சியால்கோட்டில் வன்முறை கும்பலால் இலங்கை மேலாளர் பிரியந்த குமார கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் Pervez Khattak இன் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பணியாற்றிய இலங்கையரான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதுடன், உயிருடன் எரிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரியந்தவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் கண்டிப்பாக குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.
இந்நிலையிலேயே, குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இது மோசமான சம்பவம் என்று சொல்ல முடியாது. உணர்ச்சியில் இது போன்ற செயல்கள் சில நேரங்களில் நடந்துவிடுகிறது என்று கூறி, இந்த சம்பவத்தை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.”
இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் ஒரு பாதுகாப்பு அமைச்சர் இப்படியா பொறுப்பற்று பேசுவது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

The Defence Minister of Pakistan Pervaiz Khattak justifies the murder of #SrilankanManager, Priyantha Kumara who was brutally murdered by a violent mob. Khattak says that kids do such things in passion which doesn't mean things are bad.#Sialkot #Sialkot_incident #Sialkottragedy pic.twitter.com/lWTaYQn8bD
— Hamza Azhar Salam (@HamzaAzhrSalam) December 5, 2021