திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தியில் இராமநாதன் வீதியில் உள்ள காணி ஒன்றில் தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் தீயிட்டு அழிக்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நொதேர்ன் தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளே தீயிட்டு அழிக்கப்பட்டு வந்துள்ளன.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் உள்ளிட்டோர் அந்தக் காணிக்கு இன்று காலை நேரில் சென்றனர்.
அங்கு மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டு வந்தமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் மற்றும் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை அழிக்கத் தடை உள்ள நிலையிலும் அவற்றை உரிய தொழில்நுட்பத்தில் அழிக்க ஏற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள நிலையிலும் தனியார் மருத்துவமனை இந்தச் செயலைச் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.