முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், சகோதரி கைது!


முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயதுச் சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளின் போது சிறுமியின் தந்தையார் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த இவர்கள், இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரையும் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பொலிஸார் இவர்களை 48 மணிநேரம் பொலிஸ்  காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்தனர்.

இந்நிலையில் விடயங்களை கேட்டறிந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா இவர்களை 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி காணாமல் போனதாக தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், 18ஆம் திகதி சிறுமி நிதர்சனா சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது பிரேத பரிசோதனையில், 2 மாத கர்ப்பமாக இருந்தமை உறுதியானது.

சிறுமி நிதர்சனாவின் 20 வயதான மூத்த சகோதரியை 3வது தாரமாக திருமணம் செய்திருந்த 34 வயதான அத்தானே, நிதர்சனாவை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் கைதாகினார்.

தாய், தந்தை, மூத்த சகோதரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

அத்தானால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கர்ப்பமான நிதர்சனாவிற்கு, தாயாரே கருக்கலைப்பு செய்ய முயன்றார், சிறுமியை மயக்கமடைய வைக்க ஒரு வகை மருந்தை பாவித்தார் என தந்தை ஒப்புதல் வாக்குமூலமளித்திருந்தார்.

இந்த நிலையிலேயே தாய், தந்தை, சகோதரி இன்று கைது செய்யப்பட்டனர். 

தொடர்புடைய செய்தி: 
Previous Post Next Post