மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை பரிதமாக உயிரிழந்தது.
இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரைமாத குழந்தையே உயிரிழந்தது.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால் குடித்த குழந்தை காலை 6 மணியளவில் திடீரேன மூச்சடங்கி காணப்பட்டது.
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.