திருநெல்வேலி கிழக்கு வாலையம்மன் சனசமூக நிலையத்திற்கான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி மதியம் 2 மணியளவில் யாழ்.செங்குந்த இந்துக் கல்லூரி மைதானத்தில், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தலைமையில் நடைபெற்ற விசேட பொதுக் கூட்டத்தின்போதே புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் தலைவராக நிர்மலானந்தன், செயலாளராக ஸ்ரீசந்திரகுமார், பொருளாளராக சிவதர்சன், உப தலைவராக வேதகிரீஸ்வரன், உப செயலாளராக தர்சனன், நிர்வாக சபை உறுப்பினர்களாக திருமதி. இராஜபூங்குழலி, திருமதி. எட்மன்யூடித், நாகேந்திரம், செந்தூரன், கஜநீதன், நந்தகுமார் ஆகியோரும் போசகர்களாக இ.ரவீந்திரன், நா.ரகுமார் ஆகியோரும் கணக்காய்வாளராக வ.ஸ்ரீதரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.