வெடித்துச் சிதறிய அடுப்பு! தலைக்கவசம் அணிந்து சமையல் செய்ததால் உயிர் தப்பிய பெண்!!


பன்னல, ஹெத்திரிப்புவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தலைக்கவசம் அணிந்திருந்தமையினால் தனக்கு காயம் ஏற்படவில்லை என அந்த வீட்டின் பெண் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

"நான் உணவு செய்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அடுப்பு வெடித்து சிதறியது. என் மீதும் அடுப்பின் துண்டுகள் விழுந்தன. நான் இந்த நாட்களில் தலைக்கவசம் அணிந்துகொண்டே சமைக்கின்றேன்.

நாட்டின் எல்லா இடங்களிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பதாக சொல்லப்படுகின்றது. எரிவாயுவை பயன்படுத்துவதை தவிர வேறு வழியும் இல்லை, தலைக்கவசம் அணிந்துகொண்டுதான் உணவு தயாரிக்கப்படுகிறது.

இதனால் இன்று நானும் அதையே செய்தேன், உடல் உபாதை எதுவும் ஏற்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post