முல்லைத்தீவு - கொக்குளயர் முதன்மை வீதியில் சிலாவத்தை பகுதியில் மின்சார சபைக்குச் சொந்தமான உயர் அழுத்த மின் கடத்தி செல்லும் மின்கம்பம் ஒன்றின் மீது கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மின்கம்பம் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
இதனால் சிலாவத்தை கிராமத்திற்கான மின்சாரம் இன்று(09) அதிகாலை தொடக்கம் மாலை 3.00 மணிவரை துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்கம்பத்தினை சீர்செய்யும் நடவடிக்கையில் மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளார்கள்.