கனடா அரசின் அவசர அறிவிப்பால் ஏற்பட்ட குழப்பநிலை!


கனடா அரசு, அவசர அவசரமாக அமெரிக்கர்கள் அல்லாத சர்வதேச பயணிகளுக்காக அறிவித்த அறிவிப்புகள் பயணிகளிடையேயும், விமான நிலைய ஊழியர்களிடையேயும் கடும் குழப்பத்தை உருவாக்கியுள்ளன.

காரணம், கனடா அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பாக வெகு சில தகவல்களை மட்டுமே வெளியிட்டுள்ளது.

ஓமிக்ரோன் வகை கோவிட் வைரஸ் பரவி வரும் நிலையில், பெடரல் அரசு செவ்வாயன்று சில பயணக்கட்டுப்பாடுகளை விதித்தது.

அதன்படி, அமெரிக்கர்கள் அல்லாத சர்வதேச பயணிகள் கனடாவுக்குள் வரும்போது கூடுதலாக ஒரு கோவிட் தடுப்பூசி பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்குப் புறப்படுவதற்கு முன் பயணிகள் ஒரு கோவிட் பரிசோதனை செய்யவேண்டும், இது கூடுதலாக மற்றொரு பரிசோதனை. கனடா சுகாதாரத்துறை அமைச்சர் இந்த புதிய கோவிட் பரிசோதனை திட்டம் உடனடியாக அமுலுக்கு வருவதாகப் புதனன்று அறிவித்தார்.

ஆனால், அந்த திட்டம் செயல்படுவதற்கான அறிகுறிகளையே காணவில்லை எனவும்  எங்கே, எப்போது?  என விமான நிலைய ஊழியர்களின் எழுப்பியுள்ளனர்.

இந்த கட்டுப்பாடு எப்போது நடைமுறைக்கு வருகிறது என்பது கனேடிய விமான நிலைய ஊழியர்களுக்கே தெரியவில்லை என்று கூறும் கேமரூன் டர்னர் என்ற பயணி, இந்த புதிய கோவிட் பரிசோதனையின் முடிவுக்காகக் காத்திருக்கும் பயணிகள், தங்களை எங்கே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் தெரியவில்லை என்கிறார்.

பெடரல் அரசின் கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் இணையதளத்தில் இன்னமும் புதிய தகவல்கள் உள்ளிடப்படவில்லை. அது இன்னமும் பழைய தகவல்களையே கூறிக்கொண்டிருக்கிறது.

புதிய பரிசோதனை, எங்கு, யாரால் செய்யப்படும் என்பது குறித்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. ஆக, புதிய கோவிட் பரிசோதனை குறித்த குழப்பம் மட்டுமே விடைகளின்றி நீடிக்கிறது.
Previous Post Next Post