Update: பாகிஸ்தானில் “அல்லாவு அக்பர்” என்றவாறு இலங்கையர் உயிருடன் எரிப்பு! நடந்தது என்ன? (படங்கள்)


பாகிஸ்தானில் எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் குறித்து புதிய தகவல்களை உள்ளூர்வாசிகள் வெளியிட்டுள்ளனர் என சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் - பஞ்சாப் மாகாணத்தின் சியல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன (வயது - 40) பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். 

இவரது அலுவலக சுவர் அருகே தெஹ்ரீக் - இ - லபைக் என்ற அமைப்பின் மதப் பிரசார போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதை பிரியந்த கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார்.

இதைப் பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள் அந்த அமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அந்த அமைப்பைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அத்துடன் அலுவலகத்தில் இருந்த பிரியந்தவை வெளியே இழுத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கி அவரை உயிருடன் தீ வைத்து எரித்தனர்.

தீயின் வேதனை தாங்காமல் அலறித் துடித்த பிரியந்த சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். அந்த சமயத்தில் அந்த கும்பல் அல்லாவு அக்பர் என கோஷம் போட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுளன்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கபப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உயிரிழந்த பிரியந்த மிக சிறந்த மனிதராக உள்ளூர்வாசிகளால் அறியப்பட்டுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பிரியந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பிரியந்த மிகவும் ஒழுக்கமானவர். கடின உழைப்பாளியான அவர் அதிக தெய்வ பக்தி கொண்டவர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
  • தெஹ்ரீக்-இ-லப்பைக் (TLP) இயக்கத்தின் அமைப்பு
இந்த கொலையின் பின்னணியில் TLP என்ற அமைப்பு தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பாகும், இது நாட்டில் தீவிரவாத இஸ்லாமியக் குழுவாகக் கருதப்படுகிறது.

இது 2015 இல் நிறுவப்பட்ட ஒரு சுன்னி முஸ்லிம் அமைப்பு.
பிரியந்த படுகொலை செய்யப்பட்ட காணொளியில், படுகொலையுடன் தொடர்புடைய சிலர் TLP கோஷங்களை உச்சரிப்பது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.
  • தடை நீக்கம்
இம்ரான் கானின் அரசாங்கம் TLP ஐ தடை செய்து பயங்கரவாத அமைப்பு என்று பெயரிட முடிவு செய்தது. அரசாங்கத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து, TLP கடந்த ஒக்டோபரில் லாகூரில் வன்முறை மோதல்களை உருவாக்கியது, குறைந்தது ஆறு பொலிஸ் அதிகாரிகளைக் கொன்றது.

இந்த மோதல்களை எதிர்கொண்டு, அரசாங்கம் ஒரு படி பின்வாங்கி, TLP மீதான தடையை நீக்க முடிவு செய்தது.
  • பின்னணி
TLP சம்பந்தப்பட்ட குற்றம் இது முதல் சம்பவம் அல்ல, கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறி முஸ்லிம் அல்லாதவர்களைக் குறிவைத்து பல கொலைகள் நடந்துள்ளன.
 
கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு எதிராக வெறும் மத நிந்தனை குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வன்முறையைத் தூண்டி விடப்படுகின்றன.

மேலும், மத நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பலர் சமீப வருடங்களில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
  • பிரியந்த குமார தியவதன
பிரியந்த குமார தியவதன 11 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்றிருந்தார்.

1993 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உற்பத்திப் பொறியாளராக இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்.

2010 இல், பாகிஸ்தான் Crescent Textile Garment Factory தொழில்துறை பொறியியல் மேலாளராக சேர்ந்தார்.
 
அவர் 2012 இல் ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸில் (Rajco Industries) சேர்ந்தார். இதன் பொது மேலாளராக இருந்துள்ளார்.

பிரியந்த கனேமுல்லை - வெலிபிஹில்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அவரது இரண்டு மகன்களும் 14 மற்றும் 9 வயதுடையவர்கள் என கூறப்படுகிறது.
  • பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்
இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விசாரணைகளை தாம் தனிப்பட்ட முறையில் கவனித்து வருவதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். 

“சியால்கோட்டில் உள்ள தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள்” என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
  • பஞ்சாப் மாநில முதல்வர் கண்டனம்
பஞ்சாப் மாநில முதல்வர் உஸ்மான் Buzdar விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெறுகின்றன. 
  • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கண்டனம்
இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, பாகிஸ்தானின் சியால்கோட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தாம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் இம்ரான் கானும், அந்நாட்டு அரசாங்கமும் நீதி வழங்கப்படுவதையும் எஞ்சியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என நமப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைக் கடைப்பிடிப்பார் என நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த தீவிரவாத கும்பல் நடத்திய காட்டுமிராண்டித் தனமான மற்றும் கொடூரமான தாக்குதலைக் கண்டு இலங்கை அதிர்ச்சியடைகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.


பிரியந்த தியவதனவின் குடும்பத்தைச் சந்தித்த அமைச்சர் நாமல்
Previous Post Next Post