ஜேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்து வந்த சிறந்த அறிவிப்பாளரும் சமூக சேவையாளருமான வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்கள் நேற்றுக் காலை உயிரிழந்தார்.
தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு பலதரப்பட்ட உதவித் திட்டங்களை மேற்கொண்டு வந்தார்.
புலம் பெயர் நாடுகளில் தமிழர்களின் பல நிகழ்வுகளை தொகுத்து வழங்கியவர். தனது சிறந்த அறிவிப்பு திறமைகளை வெளிப்படுத்தி மக்களின் மனங்களில் இடம்பிடித்தார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் தீடிர் இழப்பு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.