முல்லைத்தீவு மணல்குடியிருப்பு கடலில் இறங்கிய மூன்று இளைஞர்கள் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.
சம்பவத்தில் வவுனியா மதகுவைத்த குளம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் தனுஷன் (வயது -27), வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் (வயது 26) மற்றும் மதகுவைத்த குளம் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் சகிலன் (வயது-26) ஆகிய மூவருமே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களைத் தேடும் பணி கடற்படையினர் மற்றும் மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.