கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பஸ் விபத்து! பல்கலைக்கழக மாணவி பலி!! (படங்கள்)

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்தின் போது பஸ் தடம் புரண்டு அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளது.

மதவாச்சிக்கும் இகிரிகொல்லாவக்கும் இடைப்பட்ட வளைவில் 145 வது மைல் கல்லிற்கு அருகில் உள்ள வளைவில் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் ரம்பேவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post