கனடாவில் நள்ளிரவில் தமிழ் இளைஞன் கத்தியால் குத்திப் படுகொலை! மற்றொரு தமிழர் கைது!!


கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Scarboroughஐ சேர்ந்த மகிஷன் குகதாஷன் (19) என்பவரே கொலை செய்யப்பட்ட இளைஞர் ஆவார்.

கடந்த 23ஆம் திகதி Mahishan, Ajaxன் Rossland Rd. West and Ravenscroft Rdல் விருந்து ஒன்றை முடித்து விட்டு நள்ளிரவில் திரும்பும் போதும் பல முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ரொறன்ரோவை சேர்ந்த அனோச் தர்ஷன் (19) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. Anojhம் Mahishanம் நன்கு அறிமுகமானவர்கள் எனவும், அவர் Mahishanஐ கத்தியால் பலமுறை குத்தி கொன்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post