அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவை இன்று முதல் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், சமுர்த்தி பெறுவோருக்கு வழங்கப்படும் 3500 ரூபாய் கொடுப்பனவிற்கு மேலதிகமாக 1000 ரூபாவை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு பெறும் இராணுவத்தினருக்கும் இந்த 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை முன்மொழிந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அனைத்து அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருந்து பொருள்கள் மீதான வரியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
நெற்செய்கையாளர்களுக்கு உரத்தட்டுப்பாடு காரணமாக அறுவடை நஷ்டம் ஏற்படக் கூடும் என்பதால் எதிர்காலத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 75 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
தற்போது ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.50 விலை வழங்கப்பட்டு வருவதால், அறுவடைத் தட்டுப்பாட்டால் ஏற்படும் நஷ்டத்தை விவசாயிகள் கூடுதலாக ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.25 செலுத்தி ஈடுகட்டலாம்.
நெல் விலை உயர்வினால் நுகர்வோருக்கு எவ்வித சுமையும் ஏற்படாது எனவும் நிதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.