தாய்ப்பால் புரைக்கேறி பிறந்து 52 நாள்களேயான சிசு உயிரிழப்பு!


பிறந்து 52 நாள்களேயான சிசு தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.

வட்டுக்கோட்டை சித்தன்கேணியைச் சேர்ந்த சிசுவே உயிரிழந்துள்ளது என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

நள்ளிரவு தாய்ப்பால் குடித்துவிட்டு சிசு தூங்கிய சிசு அதிகாலை 3.30 மணியளவில் பார்த்த போது, மூக்கு வழியாக குருதி படிந்து காணப்பட்டுள்ளது.

உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துமனைக்குக் கொண்டு சென்று சேர்ப்பித்த போதும் சிசு உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.
Previous Post Next Post