யாழ்.காரைநகர் கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்தபோது கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்.இந்துக்கல்லூரி மாணவர் என்று தெரியவந்துள்ளது.
கோண்டாவில் இருந்து இளைஞர்கள் வாகனம் ஒன்றை வாடகைக்கு ஏற்பாடு செய்து காரைநகருக்குச் சென்று கடலில் நீராடியுள்ளனர்.
இதன் போது அவர்களில் இருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் கடற்படையினர் தீவிரமாகச் செயற்பட்டு அவர்களில் ஒருவரை மீட்டுள்ளனர்.
மற்றையவரான கோண்டாவில் தில்லையம்பதியைச் சேர்ந்த 17 வயதுடைய யோகராசா யோசீசன் என்ற மாணவரை மீட்கமுடியவில்லை.
நீண்ட நேரத்தின் பின்னர் அவருடைய சடலம் கரையொதுங்கியுள்ளது.
உயிரிழந்தவர் யாழ்.இந்துக்கல்லூரியின் உயர்தர மாணவர் என்றும் தந்தையார் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் என்றும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி: